லாரியுடன் மாயமான 342 கியாஸ் சிலிண்டர்கள்: நெல்லையில் நடந்தது என்ன?

லாரியுடன் மாயமான 342 கியாஸ் சிலிண்டர்கள்: நெல்லையில் நடந்தது என்ன?

திருநெல்வேலியில் கியாஸ் சிலிண்டர் ஏற்றிவந்த லாரி ஓட்டுநர் 342 சிலிண்டர்களுடன் திடீரென லாரி காணாமல் போனதாக புகார் கொடுத்திருப்பது சர்ச்சையானது. இதுகுறித்து போலீஸார் விசாரணையில் உண்மைச் சம்பவம் தெரியவந்தது.

திருநெல்வேலி தியாகராய நகர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் செல்லத்துரை(50) கியாஸ் சிலிண்டர் லாரி ஓட்டிவருகிறார். செல்லத்துரை கட்டபொம்மன்நகர் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக டிப்போ முன்பு தன் லாரியை நிறுத்திவிட்டு சாப்பிடச் சென்றார். திரும்பி வந்து பார்த்த போது லாரியைக் காணவில்லை. லாரியில் சமையல் எரிவாயு நிரப்பிய 342 கியாஸ் சிலிண்டர்கள் இருந்தன. இதன் மதிப்பு மட்டும் 5 லட்சம் ரூபாயாகும்.

இதனால் சிலிண்டரைக் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் யாரும் லாரியைத் தூக்கியிருப்பார்கள் என சந்தேகப்பட்ட செல்லத்துரை இதுகுறித்து பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதுதொடர்பாக போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் செல்லத்துரை லாரியை பைனான்ஸ் முறையில் எடுத்துள்ளார். அந்த லாரிக்கு உரிய மாதாந்திரத் தொகையைக் கட்டாமல் பாக்கி வைத்திருந்துள்ளார். இதனாலேயே தனியார் பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கியாஸ் லாரியை பறிமுதல் செய்தது தெரியவந்தது. இருந்தும் அவர்களுக்கு லாரியை பறிமுதல் செய்ய மட்டுமே உரிமை உள்ளது. லாரியில் அத்தியாவசிய உணவுப்பொருள்கள் தயாரிப்பிற்கான சிலிண்டர் இருந்ததால் அதை எப்படி பறிமுதல் செய்யலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in