திடீர் தாக்குதல்; 1.6 லட்சம் அபேஸ்: லாரி டிரைவரை பதறவைத்த திருநங்கைகள்

திடீர் தாக்குதல்; 1.6 லட்சம் அபேஸ்: லாரி டிரைவரை பதறவைத்த திருநங்கைகள்

விருதுநகர் மாவட்டத்தில் லாரி ஓட்டுநரை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்த பணத்தை திருநங்கைகள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம், கம்மாபட்டி திருமலாபுரம் தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார்(43). லாரி ஓட்டுநராக உள்ளார். இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து டிராக்டர் உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு சுரண்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சப்ளை செய்தார். அதற்கு கடைக்காரர்கள் கொடுத்த ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்துடன் ராஜபாளையம் நோக்கி லாரியில் சென்று கொண்டிருந்தார்.

லாரியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு சாலையோரம் சிறுநீர் கழிக்கச் சென்றார். அப்போது அங்குநின்ற முகவூர் பாம்பலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த இளவஞ்சி(21) உள்பட மூன்று திருநங்கைகள் ராம்குமாரைத் தாக்கி அவரிடம் இருந்த 1,60,000 பணத்தைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து ராம்குமார் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸார் மூன்று திருநங்கைகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநங்கைகள் தாக்குதல் நடத்தி பணம்பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in