ஆர்ப்பரித்து ஓடிய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட லாரி, பைக்: இணையத்தில் வைரலாகும் வீடியோ

ஆர்ப்பரித்து ஓடிய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட லாரி, பைக்: இணையத்தில் வைரலாகும் வீடியோ

ஆந்திராவில் ஆர்ப்பரித்து ஓடிய வெள்ளத்தில் லாரி, பைக் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், புக்கராயசமுத்திரத்தில் தரைப்பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது, அனந்தபூரில் இருந்து வந்த சரக்கு லாரி ஒன்று தரைப்பாலத்தை கடக்க முயன்றது. ஆனால், வெள்ளத்தின் ஓட்டம் அதிகமாக இருந்ததால் சரக்கு லாரி அடித்துச் செல்லப்பட்டது. உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் லாரியை கயிறு கட்டி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வந்து சரக்கு லாரியை மீட்டனர். இதில் அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் உயிர் தப்பினார்.

இதேபோல், ஹைதராபாத்தில் நேற்று இரவு வெள்ளம் சூழ்ந்த சாலை வழியாக செல்ல முயன்ற நபர், சமநிலையை இழந்து பைக்கில் இருந்து விழுந்துள்ளார். அப்போது வாகனம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இந்நிலையில், பலத்த நீரோட்டங்கள் அவரையும் இழுத்துச் செல்லும் அபாயம் இருந்த நிலையில், அங்கிருந்த மற்றொருவர், இவரை இழுத்து காப்பாற்றிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in