எனக்கு இன்னும் 7 நாட்கள் அவகாசம் வேண்டும்... ஜெர்மனியில் தலைமறைவான பிரஜ்வல் ரேவண்ணா கோரிக்கை!

பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா

ஜெர்மனியில் தலைமறைவாக உள்ள ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனக்கு 7 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று பிரஜ்வல் ரேவண்ணா தனது வழக்கறிஞர் மூலம் எஸ்ஐடிக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.

கர்நாடகா அரசியலில் ஹாசன் தொகுதி எம்.பியும், தற்போதைய ஜேடிஎஸ் வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா மீது எழுந்துள்ள பாலியல் சித்ரவதை தொடர்பான புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 300-க்கும் மேற்பட்ட பெண்கள், அரசு அதிகாரிகளை மிரட்டி பிரஜ்வல் ரேவண்ணா பலாத்காரம் செய்து அதை 2,976 ஆபாச வீடியோக்களாக எடுத்து பென் டிரைவ்வில் வைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்
பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்

அத்துடன் பிரஜ்வல் ரேவண்ணாவுடன் பல பெண்கள் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களும் அடுத்தடுத்து வெளியானதால், அவர் மீதும் அவரது தந்தை ரேவண்ணா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.அவருக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

குமாரசாமியுடன் பிரஜ்வல் ரேவண்ணா
குமாரசாமியுடன் பிரஜ்வல் ரேவண்ணா

இந்த நிலையில, தனது பாஸ்போர்ரடை பயன்படுத்தி பெங்களூருவில் இருந்து இரவோடு இரவாக ஜெர்மனிக்கு பிரஜ்வல் ரேவண்ணா தப்பிச் சென்றார். பாலியல் முறைகேடு குறித்து விசாரிக்க எஸ்ஐடி அமைக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவர் தலைமறைவானார்.

கர்நாடகா முதல்வர் சித்தராமையா
கர்நாடகா முதல்வர் சித்தராமையா

பிரஜ்வல் ரேவண்ணாவின் தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்யவும், தப்பியோடிய எம்.பி.யை மத்திய அரசு அலுவலகங்களைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு அழைத்து வருவதை உறுதி செய்யவும் தலையிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு மே 1-ம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், விசாரணைக்கு தேவையான போது பிரஜ்வல் இந்தியா திரும்புவார் என்று அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கூறினார்.

கர்நாடகா பென் டிரைவ் வழக்கின் முதல் குற்றவாளியாக உள்ள ரேவண்ணாவையும் எஸ்ஐடி விசாரிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவர் இன்றோ நாளையோ விசாரணைக்கு வருவார் என்று எஸ்ஐடி அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். அதே போல, இவ்வழக்கில் 2வது குற்றவாளியாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை எஸ்ஐடி குழு விசாரிக்க வேண்டியதுள்ளது.

இதன் காரணமாக ஜெர்மனியில் தலைமறைவாக உள்ள பிரஜ்வலை இந்தியா அழைத்து வரவேண்டும். இதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும் கர்நாடகா அரசு சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதன் மூலம் பிரஜ்வல் ரேவண்ணா ஆஜரானவுடன், அவரை காவலில் எடுத்து விசாரிக்க எஸ்ஐடி தயாராகி வருகிறது.

இந்த நிலையில், இதனிடையே, சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு 7 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று பிரஜ்வல் ரேவண்ணா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணாவின் வழக்கறிஞர் அருண், எஸ்ஐடி தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

லுஃப்தான்சா ஏர்லைன்ஸ்
லுஃப்தான்சா ஏர்லைன்ஸ்

அதில், மே 15-ம் தேதி பிரஜ்வல் இந்தியா திரும்புவது குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. லுஃப்தான்சா ஏர்லைன்ஸில் ஜெர்மனியின் பிராங்க்பர்ட்டில் இருந்து பெங்களூருக்கு பிரஜ்வால் முன்பதிவு செய்த டிக்கெட்டின் நகல் கிடைக்கப்பெற்று மே 15-ம் தேதி முன்பதிவு செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகா அரசின் அதிரடி நடவடிக்கை காரணமாக மக்களவைத் தேர்தலில் ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ள பாஜக பெரும் தர்மசங்கடத்தில் சிக்கியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகள்... செல்போனில் முன்பதிவு செய்யலாம்!

காற்றில் கரைந்த கீதம்... பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்!

‘எங்களை வெற்றிபெறச் செய்யாது போனால் மின்சாரத்தை துண்டிப்போம்’ வாக்காளர்களை மிரட்டிய காங்கிரஸ் எம்எல்ஏ

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் திடீர் ராஜினாமா... அதிர வைக்கும் பின்னணி காரணம்!

ஷாக்... ஜிம்மில் சுருண்டு விழுந்து உயிரிழந்த வாலிபர்: வெளியான அதிர்ச்சி வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in