அரசு ஊழியர்கள் அதிர்ச்சி... ஒரே நேரத்தில் 48 இடங்களில் லோக் ஆயுக்தா ரெய்டு!

கர்நாடகா லோக் ஆயுக்தா
கர்நாடகா லோக் ஆயுக்தா

கர்நாடகாவில் இன்று ஒரே நேரத்தில் மாநிலம் முழுவதும் 48 இடங்களில் பெரும் பதவி வகித்து வரும் அரசு ஊழியர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை குறிவைத்து லோக் ஆயுக்தா அமைப்பு சார்பில் சோதனை நடத்தப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள அரசு அதிகாரிகள் மீது பதிவு செய்யப்பட்ட நான்கு வழக்குகள் தொடர்பாக லோக் ஆயுக்தா அமைப்பு 10 இடங்களில் இன்று சோதனை நடத்தி வருகிறது.

லோக் ஆயுக்தாவின் சோதனை
லோக் ஆயுக்தாவின் சோதனை

குடகு மாவட்டத்தில் உள்ள மடிகேரி நகரில் உள்ள கூடுதல் எஸ்.பி நஞ்சுண்டே கவுடா வீடு, பெரியபட்னா நகருக்கு அருகே உள்ள மாகனஹள்ளி கிராமத்தில் உள்ள அவரது மாமனார் வீடு, மைசூரு நகரில் உள்ள அவரது உறவினர்கள் வீடுகளிலும் லோக் ஆயுக்தா சோதனை நடத்தப்பட்டது. மடிகேரியில் உள்ள அவரது வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் பணம் மற்றும் ஆவணங்களைக் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள தார்வாடியில் உள்ள பெலகாவி சிட்டி கார்ப்பரேஷன் உதவி கமிஷனர் சந்தோஷ் அனிஷெட்டர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இவர் முன்பு ஹூப்பள்ளி தர்வாட் சிட்டி கார்ப்பரேஷனில் பணிபுரிந்தார். கொப்பளத்தில் உள்ள நிர்மிதி மையத்தின் மேலாளர் மஞ்சுநாத் பன்னிகோப்பாவின் அலுவலகம், வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.

மேலும் குடகு மாவட்டத்தில் உள்ள ஹாரங்கி அணை கண்காணிப்பாளரின் குடியிருப்பு, கே.கே. மைசூரில் உள்ள விஜயநகர் நான்காவது ஸ்டேஜில் அமைந்துள்ள ரகுபதியிலும் சோதனை நடத்தப்பட்டது. லோக் ஆயுக்தா எஸ்.பி சுரேஷ்பாபு தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை 4 மணி முதல் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டதாக லோக் ஆயுக்தா வட்டாரங்கள் தெரிவித்தன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in