ஆடி கிருத்திகை; நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! கலெக்டர் அறிவிப்பு!

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

ஆடி கிருத்திகை தினத்தை முன்னிட்டு நாளை ராணிபேட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அந்த வகையில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியில் உள்ள முருகன் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் செல்வார்கள் என்பதால், உள்ளூர் மக்களும் செல்லும் வகையில், அம்மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வருகிற 12ம் தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் இயங்கும் எனவும் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in