பூட்டிய வீட்டை உடைத்து 22 சவரன்,1.55 லட்சம் கொள்ளை: வாலிபர் கைது

பூட்டிய வீட்டை உடைத்து 22 சவரன்,1.55 லட்சம் கொள்ளை: வாலிபர் கைது

சென்னை புளியந்தோப்பு பகுதியில் தனியாக வசித்து வரும் மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் தங்க நகைகள் மற்றும் 1.55 லட்ச ரூபாய் திருடிய நபரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை புளியந்தோப்பு போலு நாயக்கன் தெருவில் தனியாக வசித்து வருபவர் சாந்தா. தனது வீட்டைப் பூட்டி தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார் மறுநாள் வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவில் வைத்திருந்த 22 சவரன் தங்க நகைகள் மற்றும் 1.55 லட்ச ரூபாய் பணம் திருடு போய் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்த புளியந்தோப்பு காவல் நிலையத்தில் சாந்தா புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

கோவிந்த்
கோவிந்த்

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கோவிந்த் என்ற நபரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 22 சவரன் தங்கநகைகள் மற்றும் 1.47 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட கோவிந்த், சாந்தாவின் வீட்டில் வாடகைக்கு இருந்தவர் என்பதும் யானைகவனி பகுதியில் வெள்ளிக் கொலுசு கடையில் பூட்டை உடைத்து வெள்ளி கொலுசுகளைத் திருடிய வழக்கு நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in