கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு டிச. 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை: திருவண்ணாமலை கலெக்டர் அறிவிப்பு

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு டிச. 6-ம் தேதி  உள்ளூர் விடுமுறை: திருவண்ணாமலை கலெக்டர் அறிவிப்பு

கார்த்திகை தீபத் திருநாளையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் கார்த்திகை மாத தீபத்திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். கரோனா கட்டுப்பாடு காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபத்திருவிழாவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திருவண்ணாமலையில் கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தீபத்திருவிழா தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழா, டிசம்பர் 6-ம் தேதி மகாதீப பெருவிழாவாகக் கொண்டாடப்படும். இதற்காகத் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மக்கள் திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையாரைத் தரிசனம் செய்வார்கள்.

வரும் டிசம்பர் 6-ம் தேதி மட்டும் 25 லட்சம் பக்தர்களும், மகா தேரோட்டத்தின் போது 5 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டிசம்பர் 7-ம் தேதி பவுர்ணமியும் உள்ளது. இதையடுத்து பொதுமக்களின் வசதிக்காக டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 2700 சிறப்புப் பேருந்துகள் இயக்க உள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் டிசம்பர் 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வீர் பிரதாப்சிங் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in