சாலையில் கவிழ்ந்த ஆட்டோ... பறிபோன எல்கேஜி மாணவனின் உயிர்: பள்ளிக்கு சென்றபோது நடந்த சோகம்

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ... பறிபோன எல்கேஜி மாணவனின் உயிர்: பள்ளிக்கு சென்றபோது நடந்த சோகம்

பள்ளிக்கு சென்ற எல்கேஜி மாணவர் ஆட்டோ கவிழ்ந்து உயிரிழந்தார். காயம் அடைந்த 5 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், வெட்டியபந்தியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிற்கு பள்ளி இன்று திறக்கப்பட்டது. இந்நிலையில், பள்ளிக்கு செல்வதற்காக எல்கேஜி மாணவன் செல்வ நவீன் உள்பட 6 மாணவ, மாணவிகள் ஆட்டோவில் சென்றனர்.

இந்த ஆட்டோ வசவப்புரம்- செய்துங்க நல்லூர் சாலையில் இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாணவன் செல்வ நவீன் ஆட்டோவுக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 5 மாணவ, மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாணவனின் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in