சுவர் ஏறிக் குதித்து, படுக்கை அறை ரகசியங்களை ஒட்டுக் கேட்ட ஆசிரியர்: சிசிடிவியால் மனைவியுடன் சிக்கினார்

சுவர் ஏறிக் குதித்து, படுக்கை அறை ரகசியங்களை ஒட்டுக் கேட்ட ஆசிரியர்: சிசிடிவியால் மனைவியுடன் சிக்கினார்

வாடகைக்குத் தங்கி இருக்கும் தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில், தினமும் சுவர் ஏறிக் குதித்து படுக்கை அறையை ஒட்டுக் கேட்டு வந்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்துள்ள காயரம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(41). தூத்துக்குடியைச் சேர்ந்த இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கூடுவாஞ்சேரி அடுத்துள்ள காயரம்பேடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். சமீப காலமாக இவர் தங்கியிருக்கும் வீட்டில் படுக்கை அறை அருகே யாரோ நடமாடுவது போல சந்தேகம் எழுந்தது. அவரின் வீட்டில் மர்ம நபர்கள் வந்து செல்வதற்கான தடயங்களும் தென்பட்டன. இதையடுத்து அவர்களை கையும் களவுமாகப் பிடிக்கும் நடவடிக்கைகளில் ராதாகிருஷ்ணன் இறங்கினார். அதற்காக அந்த வீட்டின் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி இருக்கிறார். சில தினங்கள் கழித்து அதில் பதிவான காட்சிகளைப் பார்த்து ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தார்.

அந்த வீட்டின் உரிமையாளர் கனகசபாபதி தினமும் சுவர் ஏறிக் குதித்து வீட்டிற்குள் நுழையும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தன. படுக்கையறை மட்டும் இல்லாமல், குளியல் அறையையும் அவர் நோட்டமிடுவதை சிசிடிவி காட்சிகள் காட்டிக் கொடுத்தன. கனகசபாபதியின் மனைவியும் சுவர் ஏறிக் குதிக்கும் காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தது. இது குறித்து வீட்டின் உரிமையாளர் கனகசபாபதியிடம் ராதாகிருஷ்ணன் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தன் வீட்டில் சுவர் ஏறிக் குதித்து படுக்கை அறை ரகசியங்களை ஒட்டுக் கேட்பதாகவும், தன்னை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வீட்டு உரிமையாளர் கனகசபாபதி மீது ராதாகிருஷ்ணன் கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் கனகசபாபதி செயலுக்கு அவரது மனைவியும் உடந்தையாக இருப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தார். அவர்கள் சுவர் ஏறிக் குதிக்கும் வீடியோ காட்சிகளையும் அவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ராதாகிருஷ்ணன் தெரிவித்த புகாருக்கு ஆதாரம் உள்ள நிலையில் கனகசபாபதி மற்றும் அவரது மனைவி மீது பொது இடத்தில் தவறாக நடந்து கொள்ளுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். கனகசபாபதி செங்கல்பட்டு அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். மாணவர்களுக்கு ஒழுக்கத்தைப் போதிக்க வேண்டிய ஆசிரியரே தரம் தாழ்ந்த செயலில் ஈடுபடுவது அப்பகுதியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in