பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை… களமிறங்கிய பெண்கள்: சூறையாடப்பட்ட சாராயக்கடை!

பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை… களமிறங்கிய பெண்கள்: சூறையாடப்பட்ட சாராயக்கடை!

நாகை மாவட்டத்தில் காவல்துறையில் பல முறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காததால் சாராயக்கடையை பெண்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம், ஆதமங்கலம் கீழகண்ணாப்பூரில் குடியிருப்பு பகுதியில் சாராயக்கடை செயல்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குறிப்பாக, பெண்கள், மாணவ, மாணவிகள் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. குடிமகன்களின் அட்டகாசத்தால் நாளுக்கு நாள் பிரச்சினை அதிகமானதால், இதுகுறித்து காவல்துறையில் அப்பகுதி மக்கள் புகார் கொடுத்தனர். ஆனால், காவல்துறை இந்த புகாரை கண்டு கொள்ளவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கீழகண்ணாப்பூர் பெண்கள், மாதர் சங்கத்தினருடன் இணைந்து சாராயக்கடையை இன்று அடித்து நொறுக்கினர். அப்போது அங்கு சாராயம் விற்றுக் கொண்டிருந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர் தப்பியோடி விட்டார். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய மூட்டைகள், பாத்திரங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in