கூடுதல் விலைக்கு மது விற்பனை: தட்டிக்கேட்ட பாஜக பிரமுகர் மீது திமுகவினர் தாக்குதல்

கூடுதல் விலைக்கு மது விற்பனை: தட்டிக்கேட்ட பாஜக பிரமுகர் மீது திமுகவினர் தாக்குதல்

கூடுதல் விலைக்கு மது விற்பதைத் தட்டிக்கேட்ட பாஜக பிரமுகரை திமுகவினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம். நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது பள்ளப்பட்டி. இங்கு மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே சிப்காட் பகுதி அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் அரசு அனுமதி இல்லாமல் திமுகவைச் சேர்ந்தவர் பார் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், டாஸ்மாக்கில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணனின் தம்பி அழகர்சாமி நேற்று கடைக்குச் சென்று தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாரில் இருந்தவர்கள் அழகர்சாமியை சுற்றி வளைத்து தாக்கினர். இதில் அவர் காயமடைந்தார். தகவல் அறிந்த போலீஸார் அவரை மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் பாஜகவினர் நேற்று இரவு புகார் அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in