திடீரென தாக்கிய சிங்கம் - சாலையில் தனிமையில் சென்ற சிறுவனுக்கு நடந்த துயரம்

திடீரென தாக்கிய சிங்கம் - சாலையில் தனிமையில் சென்ற சிறுவனுக்கு நடந்த துயரம்

குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள வாவ்டி கிராமத்தில் நேற்று மாலை 15 வயது சிறுவன் ஒரு பெண் சிங்கத்தால் அடித்துக் கொல்லப்பட்டதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

வாவ்டி கிராமத்தை சேர்ந்த ராகுல் மெஸ்வானியா என்ற சிறுவன் கிராமத்தின் புறநகரில் வெளியே உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சாலையின் வழியாகச் சென்றபோது சிங்கத்தால் தாக்கப்பட்டதாக ரேஞ்ச் வன அதிகாரி யோக்ராஜ்சிங் ரத்தோட் கூறினார்.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனின் பெற்றோர் குஜராத்தில் தங்கி விவசாய கூலி வேலை செய்கின்றனர். சிறுவனைக் கொன்ற சிங்கத்தை பிடிக்க கூண்டுகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், அப்பகுதியை வனத்துறையினர் இதனை கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய சிங்கங்களின் ஒரே வசிப்பிடமான குஜராத்தில், 2015ல் 523 ஆக இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை 2020ல் 29 சதவீதம் அதிகரித்து 674 ஆக உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in