சமூகவிரோதிகளுடன் தொடர்பு: கேரளாவில் 2 டிஎஸ்பிக்கள் சஸ்பெண்ட்

சமூகவிரோதிகளுடன் தொடர்பு: கேரளாவில் 2 டிஎஸ்பிக்கள் சஸ்பெண்ட்

கேரளத்தில் சமூகவிரோதிகளுடன் தொடர்பில் இருந்ததாக இரு போலீஸ் டிஎஸ்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கேரளா காவல்துறை இயக்குநர் அனில்காந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவனந்தபுரம் ஊரக குற்றப்பிரிவு டிஎஸ்பி ஜான்சன், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி எம்.பிரசாத் ஆகியோருக்கு சமூகவிரோதக் கும்பலோடு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

முட்டாடா பகுதியைச் சேர்ந்த நிதின், உம்பிடி ரெஞ்சித் ஆகியோருக்கு இடையே நடந்த ரியல் எஸ்டேட் தொடர்பான மோதலில் இவர்கள் இருவரும் சமரசம் பேசியுள்ளனர். இந்த ரஞ்சித் ஓம்பிரகாஷ் என்னும் கேரளாவின் மிகப்பெரிய சமூக விரோதியோடு தொடர்பில் உள்ளவர். இந்தக் கும்பலை இரு டிஎஸ்பிகளும், ரயில்வே இன்ஸ்பெக்டர் ஒருவரோடு சேர்ந்து சந்தித்து சில ஆதாயங்களுக்காக சமரசம் செய்தது ஆதாரத்துடன் தெரியவந்துள்ளது.

டிஎஸ்பி ஜான்சனின் மகளின் பிறந்தநாளையும் இந்த சமூகவிரோதக் கும்பலே முன்னின்று நடத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் டிஎஸ்பிக்கள் ஜான்சன், எம்.பிரசாத் ஆகிய இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்படுகின்றனர்.”என கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் 2 டிஎஸ்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்,பவம் போலீஸாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in