மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை மீண்டும் இணைக்க ஜன.31-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால், இதுவரை இணைக்காத மின் நுகர்வோர்கள் மின் வாரிய இணையதளத்தை பயன்படுத்தியும் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில், தமிழகத்தின் 2.36 கோடி பேர் மின் இணைப்பு பெற்றுள்ளனர். இவர்களுக்கு அப்பால் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் விவசாயம் உள்ளிட்டவைக்கான இலவச மின் இணைப்புகளை பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் டிசம்பர் இறுதிக்குள், தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு மின்சார வாரியம் உத்தரவிட்டிருந்தது.

மின்சார வாரியத்தின் இணையதளம் வாயிலாக, பொதுமக்கள் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கலாம் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் டிசம்பர் 31-ம் தேதி வரை சுமார் 50 சதவீதம் பேர் இணைத்திருந்தனர். இதையடுத்து, ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக அதற்கான கால அவகாசம் ஜன.31-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மின் நுகர்வோர்கள் மின் வாரிய இணையதளத்தை பயன்படுத்தியும் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக அரசு வழங்கிய கால அவகாசம் நீட்டிப்பு நிறைவு பெறுவதற்கு இன்னும் 2 வாரங்கள் அவகாசம் உள்ளன. நேற்று வரை மின் இணைப்பு எண்ணுடன் 1.96 கோடி பேர் தங்களது ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். இன்னும் சுமார் 70 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைக்க வேண்டி உள்ளது. அவர்களையும் பட்டியலில் கொண்டு வருவதற்காக அவர்களது செல்போன் எண்ணுக்கு மின் வாரிய ஊழியர்கள் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறார்கள். இதை தவிர மின் நுகர்வோர்களை தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு ஆதார் எண்ணை இணைக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in