கேரளாவை கண்கலங்க வைத்த மரணம்; குழந்தைகளுக்காக மறுமணம் செய்து கொண்ட லினியின் கணவர்: நெகிழும் நெட்டிசன்கள்

கேரளாவை கண்கலங்க வைத்த மரணம்; குழந்தைகளுக்காக மறுமணம் செய்து கொண்ட லினியின் கணவர்: நெகிழும் நெட்டிசன்கள்

கேரளத்தில் நிபா வைரஸ் தாக்கி உயிர் இழந்த செவிலியர் லினியின் கணவருக்கு மறுமணம் நடந்துள்ளது. லினியின் குழந்தைகளுக்கு அம்மா கிடைத்துவிட்டார் என கேரள சமூகவலைதளங்களில் இந்தத் திருமணக் காட்சிகள் வைரல் ஆகிவருகிறது.

கேரளத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நிபா என்னும் வைரஸ் தாக்கியது. அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அர்ப்பணிப்பு உணர்வோடு சிகிச்சையளித்தார் லினி. இதில் அவருக்கும் தொற்று ஏற்பட்டு, பரிதாபமாக உயிர் இழந்தார். கரோனாவால் உறவுகள் பார்க்காமலேயே அடக்கம் செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அதற்கும் முன்பே நிபா வைரஸால் உறவுகளே பார்க்காமல் லினியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

லினிக்கு இரு குழந்தைகள். அவர்களை வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பு குழந்தைகளின் தந்தை சஜிஷ் வசமானது. லினியின் தியாகத்தை மெச்சும்வகையில் சஜிஷ்க்கு, அரசு வேலை வழங்கியது கேரள அரசு. சஜிஷ்க்கு கடந்த 2018-ம் ஆண்டு வேலை வழங்கிய போதும், தன் முதல் மாத சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கினார்.

லினியின் கணவர் சஜிஷ் இப்போது பிரதீபா என்பவரை மறுமணம் செய்துள்ளார். ஏற்கெனவே திருமணம் முடிந்து, கணவரை இழந்த பெண்ணை சஜிஷ் மறுமணம் செய்துள்ளார். அவருக்கும் ஏற்கெனவே பெண் குழந்தை இருக்கிறது. இதன் மூலம் லினியின் ரதுல், சித்தார்த் என்னும் இரு மகன்களுக்கு அம்மாவும், சகோதரியும் கிடைத்திருப்பதாக கேரள நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in