அடுத்தடுத்து தாக்கிய மின்னல்: ஒரு நாளில் பறிபோன 17 உயிர்கள்

அடுத்தடுத்து தாக்கிய மின்னல்: ஒரு நாளில் பறிபோன 17 உயிர்கள்

பிஹார் மாநிலத்தில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அசாம், மேகாலயா, பிஹார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் மக்களிடம் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழைக்கு 30க்கும் அதிகமானோர் உயிரிந்துள்ளனர். இதனிடையே, பிஹார் மாநிலம் முழுவதும் நேற்று கனமழை பெய்தது. மின்னல் தாக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

பகர்பூர் மாவட்டத்தில் 6 பேரும், வைஷாலி மாவட்டத்தில் 3 பேரும், பாங்கா, பகாரிய மாவட்டங்களில் தலா 2 பேரும், மூக்கர், மாதேபுரா, கதிகால் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என ஒரே நாளில் 17 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள மாநில முதல்வர் நிதிஷ்குமார், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in