மின்னல் வேகத்தில் வந்த லாரி: விபத்தில் சிக்கியவரை மீட்கச் சென்ற 2 டிரைவர்கள் பலி

மின்னல் வேகத்தில் வந்த லாரி: விபத்தில் சிக்கியவரை மீட்கச் சென்ற 2 டிரைவர்கள் பலி

திருப்பத்தூரில் விபத்தில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநரை காப்பாற்றச் சென்றவர்கள் மீது அதிவேகமாக வந்த லாரி மோதி 2 லாரி ஓட்டுநர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உடையராஜபாளையம் பகுதியில் இன்று அதிகாலை ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநரை அவ்வழியாகச் சென்ற லாரி ஓட்டுநர்கள் காப்பாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி மின்னல் வேகத்தில் சென்ற லாரி அஆட் ஆட்டோ ஓட்டுநரைக் காப்பாற்றச் சென்றவர்கள் மீது மோதியது. இதில் இரண்டு லாரி ஓட்டுநர்களும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும்.3 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் காவல் துறையினர் இரண்டு லாரி ஓட்டுநர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆரணியைச் சேர்ந்த கிருஷ்ணன், சீனிவாசன் என்பது தெரியவந்தது இந்த விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநரை ஆம்பூர் போலீஸார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in