திருமணத்தை மறைத்து இளம்பெண்ணுடன் வாழ்க்கை: கொல்கத்தாவில் சிக்கிய சென்னை சப்-இன்ஸ்பெக்டர்

திருமணத்தை மறைத்து இளம்பெண்ணுடன் வாழ்க்கை: கொல்கத்தாவில் சிக்கிய சென்னை சப்-இன்ஸ்பெக்டர்

திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணுடன் வாழ்ந்ததோடு அவரை மிரட்டிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டு இருப்பது காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையில் நடந்த மரக்கன்று விழாவில் பெண் ஒருவருடன் ஆயுதப்படைச் சேர்ந்த சிறப்பு ஆய்வாளர் ஆண்ட்ரூசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதோடு, அந்த பெண்ணுடன் சில மாதங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்திருக்கிறார். இந்த நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ் ஏற்கெனவே திருமணமானவர் என்றும் அவருக்கு தன்னைவிட வயது அதிகம் என்றும் அந்த பெண்ணுக்கு தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து அவரிடம் இருந்து அந்தப் பெண் விலகி இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து அந்தப் பெண்ணை தொடர்ந்து உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ் மிரட்டி வந்திருக்கிறார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ் தலைமறைவானார். அவரை தனிப்படையினர் தேடி வந்த நிலையில் கொல்கத்தாவில் அவர் பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற தனிப்படையினர் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in