யார் வாழ்க்கையும் இங்கு எளிது கிடையாது: ரசிகர் கேள்விக்கு ‘குக் வித் கோமாளி' ஷிவாங்கி பளிச் பதில்

யார் வாழ்க்கையும் இங்கு எளிது கிடையாது:  ரசிகர் கேள்விக்கு ‘குக் வித் கோமாளி' ஷிவாங்கி பளிச் பதில்

பிரபலங்கள், மீடியாவில் இருப்பவர்கள் என்றாலே அவர்களுக்கு புகழ் வெளிச்சம் இருப்பது போலவே நிறைய எதிர்மறை விமர்சனங்களும், கருத்துக்களும் பொதுவில் வரும். சமூக வலைதளங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அந்த வகையில் சமீபத்தில் தனக்கு வரும் எதிர்மறை விமர்சனங்கள் கருத்துக்களை எல்லாம் மிகவும் முதிர்ச்சியாக அணுகி வருகிறார் 'குக் வித் கோமாளி' ஷிவாங்கி.

அந்தவகையில் ரசிகர் ஒருவர் மீடியாவில் இருப்பவர்கள் பற்றியும், பிரபலங்களின் வாழ்க்கை பற்றியும் தன்னுடைய நிலையுடன் ஒப்பிட்டு ஷிவாங்கியின் சமூக வலைதளப்பதிவு ஒன்றில் கமெண்ட் செய்து இருக்கிறார். அதற்கு ஷிவாங்கி வழக்கம்போல தனது முதிர்ச்சியான அணுகுமுறையால் பதில் கொடுத்திருக்கிறார்.

அந்த ரசிகர் சொல்லி இருப்பதாவது: உங்களுக்கு எல்லாம் ஒரு கம்பெனியில் இன்டர்வியூ அட்டெண்ட செய்துவிட்டு வேலை கிடைக்குமா கிடைக்காதா, அந்த வேலைக்கு கூப்பிடுவார்களா மாட்டார்களா என்பது போன்ற டென்ஷன் சுத்தமாக இல்லாத ஒரு வாழ்க்கை கிடைத்திருக்கிறது. சூப்பர். இதற்கு வாழ்த்துக்கள். ஆனால் எங்களைப் போன்ற மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் பதற்றத்துடன் எல்லாவற்றிற்கும் காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இதற்கு ஷிவாங்கி, “ உங்களுடைய சூழ்நிலை எனக்குப் புரிகிறது. ஆனால் எங்களுக்கும், நாங்கள் செய்கிற ஒவ்வொரு வேலையும் உங்களுக்குப் பிடிக்குமா பிடிக்காதா என்றே பதற்றம் இருந்து கொண்டே இருக்கும்.

உங்களுக்குப் பிடிக்கும்படியான வேலை செய்தால் மட்டுமே நாங்கள் இங்கு இருக்க முடியும். தொடர்ந்து இந்த துறையில் வேலை செய்யவும் முடியும். அதனால் எந்த வாழ்க்கையும், யாருடைய வாழ்க்கையும் இங்கே எளிது கிடையாது. அவர்கள் பணக்காரனோ, ஏழையோ, மிடில் கிளாஸோ எல்லோருக்கும் அவர்களுடைய போராட்டம் என்பது இருக்கத்தான் செய்யும். அதுதான் நடிகர்களுடைய வாழ்க்கை” என பதிவில் பகிர்ந்துள்ளார் ஷிவாங்கி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in