33 ஆயிரம் மலர் செடிகள்; தத்ரூபமாக உருவாக்கப்பட்ட விலங்குகள்: புதுச்சேரியில் களைகட்டும் கண்காட்சி

மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கும் ஆளுநர். அருகில் முதல்வர்
மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கும் ஆளுநர். அருகில் முதல்வர்

புதுச்சேரி மாநிலம் புதுச்சேரியில் வேளாண் துறை சார்பில் 33-வது மலர், காய், கனி கண்காட்சி இன்று தொடங்கியது. புதுவை மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். 

புதுவையில் வேளாண்துறை சார்பில் ஆண்டுதோறும் மலர், காய், கனி கண்காட்சி நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான 33 -வது  மலர், காய்கனி கண்காட்சி இன்று ரோடியர் மில் திடலில் தொடங்கியது.  முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில்  புதுவை மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார். 

மலர் கண்காட்சியில் புதுவை அரசின் தோட்டக்கலைத்துறை சார்பில் உருவாக்கப்பட்ட 33 ஆயிரம் மலர் செடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் கசேனியா, டைலார்டியா, பொரேனியா, டெர்பினா, ஸ்நாப்டிராகன், செலோசியா, சால்வியா, பெட்டுனியா என புதிய ரக பூஞ்செடிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

யானை, டைனோசர், பென்குயின், மாட்டு வண்டி போன்றவைகள் மலர்களால்  தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது கண்போரை கவர்ந்திருக்கும் வகையில் மிக அழகுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி வருகிற 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடக்கிறது.

இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், எம்.பி.க்கள் செல்வகணபதி, வைத்திலிங்கம், தலைமைச்செயலாளர் ராஜீவ் வர்மா, வேளாண்துறை செயலாளர் குமார், இயக்குநர் ராமகிருஷ்ணன் உட்பட  பலரும்  கலந்துகொண்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in