எல்ஐசி
எல்ஐசிThe Hindu

அதானி இடியிலிருந்து மீளாத எல்ஐசி!

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை அதானி குழுமத்தை மட்டுமன்றி எல்ஐசி நிறுவனப் பங்குகளையும் சாய்த்திருப்பது, தொடர்ந்து 7வது சந்தை நாளில் தொடர்ந்த அதன் சரிவு உணர்த்தி உள்ளது.

திங்களன்று எல்ஐசி பங்கு ஒன்றின் விலை ரூ.566க்கு குறைந்தது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டதில் இருந்து மிகவும் கீழிறங்கியதாக அதன் சந்தை போக்கு உணர்த்தி உள்ளது. தொடர்ந்து 7 வணிக தினங்களாக தொடர்ந்த எல்ஐசி நிறுவனப் பங்கின் சரிவு முதலீட்டாளர்களுக்கு கவலை தந்திருக்கிறது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 14% சரிந்திருக்கும் எல்ஐசி பங்கு ஒன்றின் மதிப்பு, பட்டியலிடப்பட்டதில் இருந்து இதுவரை 40% வரை அடிவாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. எல்ஐசி பங்கு ஒன்றின் விலை ரூ.949 என்றளவில் வெளியான நிலையில், தற்போது ரூ.566க்கு சரிவு கண்டிருக்கிறது.

ஜனவரி 24 அன்று அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவத்தின் அறிக்கை வெளியானது. அப்போது முதல் அதானி குழும நிறுவனங்களை பங்குச்சந்தை படுத்தியெடுத்து வருகிறது. பக்க விளைவாக, அதானி குழும நிறுவனங்களில் சிலவற்றில் முதலீடு செய்திருக்கும் எல்ஐசி நிறுவனத்தையும் அது பாதித்துள்ளது.

எல்ஐசி பங்கின் மதிப்பு, அது வெளியானது முதலே சரிவு கண்டிருந்தபோதும், அதானி பாதிப்பால் மேலும் புதிய சரிவுகளை எட்டி வருகிறது. இதற்கிடையே, 7 வணிக தினங்களாக நீடித்த சரிவின் போக்கிலிருந்து சற்றே மீண்டதாக ரூ.570க்கு மேல் தத்தளிப்புன் இன்று எல்ஐசி பங்கு காணப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in