அபாயகரத்தில் அதானி: அரவணைப்பைத் தொடரும் எல்ஐசி!

அதானியில், எல்ஐசி மேலும் ரூ.300 கோடி முதலீடு
எல்ஐசி - அதானி
எல்ஐசி - அதானி

அதானி குழுமத்தின் மீதான மோசடிப் புகார்களின் மத்தியில், அதன் நிறுவனப் பங்குகளில் தொடர்ந்து முதலீடு செய்து வரும் எல்ஐசி நிறுவனத்தை முதலீட்டாளர்கள், பாலிசிதாரர்கள் மற்றும் பொதுமக்கள் கவலையோடு கவனித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டுகளில் அதானி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் இந்திய பொதுத்துறை நிறுவனங்கள், அதானி பங்குகளை வாங்கிக் குவித்துள்ளன. எல்ஐசி முதல் எஸ்பிஐ வங்கி வரை அவற்றின் பட்டியல் நீள்கிறது. தன்னிச்சையாக அவை முடிவெடுத்து அதானியில் முதலீடு செய்தனவா அல்லது அதிகாரமிக்கவர்களின் அழுத்தம் காரணமாக அவ்வாறு செய்தனவா என்ற விவாதம் தற்போது சூடு பிடித்துள்ளது.

இதற்குக் காரணம் கடந்த வாரம் வெளியான அமெரிக்காவின் ஹின்டன்பர்க் ஆய்வறிக்கை. அவை ஊதிய எச்சரிக்கை சங்கினை அடுத்து அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் சரிவை எதிர்கொண்டன. இதனால் அதானி குழுமத்தின் 7 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள எல்ஐசி மற்றும் எஸ்பிஐ நிறுவனங்களும் பாதிப்பு அடைந்தன.

ஹின்டன்பர்க் எச்சரிக்கையை அடுத்து கடந்த வாரத்தின் கடைசி 2 சந்தை தினங்களான, வியாழன் மற்றும் வெள்ளியில் மட்டும் அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு சுமார் ரூ.4.17 லட்சம் கோடி வரை வீழ்ச்சி அடைந்தது. சந்தையின் மிகப்பெரும் இந்த நிறுவனங்களின் சரிவு ஒட்டுமொத்த பங்குச்சந்தையின் போக்கையும் பாதாளத்துக்கு இழுக்க முயன்றது. உலகளாவிய பொருளாதார மந்தம் காரணமாக பங்குச்சந்தைகள் ஊசாலிக்கொண்டிருக்கும் சூழலில், அதானி நிறுவனங்களால் இந்திய சந்தைக்கும் ஆபந்து எழுந்தது.

’அதானி குழுமத்தின் 7 முக்கிய நிறுவனங்கள் உண்மைக்கு மாறாக தங்களது நிதிநிலையை போலியாக சித்தரித்தது, பல்லாயிரம் கோடிகளை கடனாக வாங்கியதை மறைத்து பங்குச்சந்தைகளில் பெரும் லாபம் பார்த்தது’ போன்றவை ஹின்டன்பர்க் குற்றச்சாட்டுகளில் அடங்கும். இதே குற்றச்சாட்டுகளை முறைப்படி விசாரிக்குமாறு காங்கிரஸ் கட்சி சார்பில், பங்குசந்தை நடவடிக்கைகளை கண்காணிக்கும் ’செபி’ அமைப்பிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அதானிக்கு எதிரான இத்தனை களேபரங்களுக்கும் மத்தியில், மீண்டும் அதானி பங்குகளை ரூ.300 மதிப்பில் எல்ஐசி வாங்குவது குறித்தான தகவல் வெளியாகி இருக்கிறது. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ரூ20 ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குகளில், எல்ஐசி நிறுவனம் சுமார் 9 லட்சம் பங்குகளை ரூ.300 கோடிக்கு வாங்குவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்னதாக அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களில் எல்ஐசி சார்பில் ரூ.28.40 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்யப்பட்டிருந்தது. அவை ரூ.72.20 ஆயிரம் கோடிக்கு பெருகியிருந்த நிலையில், கடந்த சில தினங்களின் அதானி குழும சரிவு காரணமாக ரூ.55.70 ஆயிரம் கோடியாக அவை குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in