நூலக பெண் ஊழியரை பலாத்காரம் செய்ய முயற்சி: வீட்டிற்குள் புகுந்து மிரட்டிய அதிகாரி கைது

நூலக பெண் ஊழியரை பலாத்காரம் செய்ய முயற்சி: வீட்டிற்குள் புகுந்து மிரட்டிய அதிகாரி கைது

கோவையில் நூலக பெண் ஊழியர் வீட்டிற்குள் அத்துமிறி நுழைந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ய மு யன்ற அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் காரமடையைச் சேர்ந்த 47 வயது பெண், கிராமப்புற நூலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. கோவையில் உள்ள நூலகத்தில் புத்தகம் இருப்பு கணக்கிடும் அதிகாரியாக உக்கடம் கரும்புக்கடையைச் சேர்ந்த சுல்தான் மியாமணியம் (47) உள்ளார். இவர் கிராமப்புற நூலகத்திற்கு அடிக்கடிச் சென்று பெண் ஊழியரிடம் தவறாக நடக்க முயன்றார். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் அந்த பெண் ஊழியர் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

சம்பவத்தன்று பெண் ஊழியர் பணியில் இருந்தபோது நூலகத்துக்கு வந்த சுல்தான் மியாமணியம் அவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் ஊழியர் சத்தம் போடவும் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் பிற்பகலில் அந்த பெண் ஊழியர் சாப்பிடுவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் அவரது வீட்டிற்குள் அத்துமீறி சுல்தான் மியாமணி சென்றார். அங்கு அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அந்த பெண் ஊழியர் சத்தம் போடவும், நடந்த சம்பவங்களை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டி விட்டுச் சென்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் ஊழியர், காரமடை போலீஸில் புகார் செய்தார். இதன் பேரில், பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச்சட்டம், ஆபாசமாக பேசுதல், மானபங்கம் செய்ய முயன்றல், பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சுல்தான் மியாமணியம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் காரமடை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in