ஆத்தூர் காமராஜர் அணைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: இரையாகும் ஆடு, நாய்களால் பொதுமக்கள் பீதி

ஆத்தூர் காமராஜர் அணைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: இரையாகும் ஆடு, நாய்களால் பொதுமக்கள் பீதி

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் அணைப்பகுதியில் கால்நடைகளை இரையாக்கி வரும் சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆத்தூர் காமராஜர் அணை மேற்கு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. இப்பகுதியில் யானை, சிறுத்தை, மான், காட்டு மாடு, காட்டுப்பன்றி என பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில், ஆத்தூர் காமராஜர் அணைப்பகுதி புதருக்குள் கடந்த இரு வாரங்களாக பதுங்கியுள்ள சிறுத்தை, அப்பகுதியில் அடிக்கடி நடமாடுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டிச.24-ம் தேதி சடையாண்டி கோவில் அருகே ஒரு மானை சிறுத்தை அடித்துக் கொன்று இழுத்து சென்றதைப் பார்த்த அப்பகுதி விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். விவசாயிகளின் தகவல் படி சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

ஆனால், அப்பகுதியில் தொடர்ந்து நடமாடும் சிறுத்தை கடந்த சில நாட்களுக்கு முன், ஆடு மேய்த்துக் கொண்டிருந்த, ஆத்தூர் நரி என்பவருக்கு சொந்த 2 ஆடுகளை அடித்து இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அக்கரைபட்டி வேல்முருகன் என்பவரது தென்னந்தோப்பில் காவலுக்கு இருந்த நாயையும் சிறுத்தை அடித்து இழுத்து சென்றதை பார்த்து வேல்முருகன் அதிர்ச்சி அடைந்தார். மல்லையாபுரம், ஆத்தூர், சித்தரேவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பழனிச்சாமி, அன்பு, கணேசன் ராமர் உள்ளிட்ட விவசாயிகள் இரவு வேளையில் சிறுத்தை நடமாடுவதை கண்டு அச்சமடைந்தனர்.

இந்த சிறுத்தையை விரட்ட இரவு வேளையில் வனத்துறையினர் வெடி போட்டு வருகின்றனர். நடமாட்டத்தைக் கண்காணித்து சிறுத்தையைப் பிடிக்க அக்கரைபட்டி வேல்முருகன் தோட்டத்தில் கன்னிவாடி வன துறையினர் நேற்று சிசிடிவி கேமிராவைப் பொருத்தினர். ஆத்தூர் காமராஜர் அணைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால், அப்பகுதி மக்கள் தொடர்ந்து

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in