அறைக்குள் புகுந்த சிறுத்தை... அலறிப் பதுங்கிய குடும்பத்தினர்!

அறைக்குள் புகுந்த சிறுத்தை... அலறிப் பதுங்கிய குடும்பத்தினர்!

மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் உள்ள ஒரு வீட்டிற்குள் சிறுத்தை இருப்பதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் சதாரா கோயநகரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் துர்கா பூஜை நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்த போது, அவர்களின் வீட்டிற்குள் சிறுத்தை புகுந்தது. குடும்பத்தினர் திரும்ப வந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, ஒரு அறையின் வாசலில் சிறுத்தைப்புலி அமர்ந்திருந்தது. குடும்பத்தினர் பதறியடித்து ஓடி வந்து சிறுத்தையை வீட்டிற்குள் வைத்து பூட்டினர்.

சிறுத்தை வீட்டில் இருப்பதை அறிந்ததும் அப்பகுதியில் பெரும் கூட்டம் கூடிவிட்டது. பலர் உள்ளே சிறுத்தை சுற்றித் திரிவதை வீடியோ எடுத்தனர். ஒரு வீடியோவில், சிறுத்தை அறைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மற்றொரு வீடியோவில் சிறுத்தை ஜன்னலில் வீடியோ பதிவு செய்பவரின் கேமராவை நோக்கி நடந்து வரும் காட்சிகளும் உள்ளன

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பின்னர் சிறுத்தையை பிடித்த வனத்துறையினர் வனப்பகுதியில் விட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in