சிறுமியைக் கொன்ற சிறுத்தை சிக்கியது: நீலகிரி மக்கள் மகிழ்ச்சி

சிறுமியைக் கொன்ற சிறுத்தை சிக்கியது: நீலகிரி மக்கள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டத்தில் 4 வயது குழந்தையைக் கடித்துக் கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே தேனாடுகம்பை அரக்காடு பகுதியில் கடந்த சில வாரங்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்தது. அங்கிருந்து கண்காணிப்பு கேமிராக்களில் சிறுத்தை குடியிருப்பு பகுதிகளில் உலாவுவது தெரிய வந்தது. இதனால் அந்த சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வனத்துறைக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், கோத்தகிரி அருகே தேனாடுகம்பை அரக்காடு பகுதியிலுள்ள தனியார் தேயிலை தோட்டத்தில், அசாம் மாநிலத்தை சேர்ந்த கிஷாந்த் என்பவர் குடும்பத்துடன் வேலை செய்து வருகிறார். அவரது மகள் சரிதா(4) கடந்த வாரம் சிறுத்தை தாக்கி உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, அரக்காடு பகுதியில் 4 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி, சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். கடந்த மூன்று நாட்களாக சிறுத்தை வந்து சென்றது கேமராவில் பதிவானது. இதையொட்டி சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. நேற்று நள்ளிரவில் அந்த சிறுத்தை கூண்டிற்குள் சிக்கியது. இந்த தகவல் அறிந்த அப்பகுதிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “ பிடிபட்ட சிறுத்தை முதுமலை புலிகள் காப்பகத்தில் விடப்படும்” என்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in