யூசுப் பதானை அடிக்க பாய்ந்த ஆஸ்திரேலிய வீரர் ஜான்சன்; பதறிய நடுவர்கள்: மைதானத்தில் நடந்தது என்ன?

யூசுப் பதானை அடிக்க பாய்ந்த ஆஸ்திரேலிய வீரர் ஜான்சன்; பதறிய நடுவர்கள்: மைதானத்தில் நடந்தது என்ன?

லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் யூசுப் பதானும், ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஜான்சனும் மோதிக் கொண்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த 16-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 4 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், 6 நகரங்களில் 16 போட்டிகள் நடைபெறுகின்றன. குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு சேவாக்கும், இந்தியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு கவுதம் காம்பீரும், பில்வாரா கிங்ஸ் அணிக்கு இர்ஃபான் பதானும், மணிப்பால் டைகர் அணிக்கு ஹர்பஜன் சிங்கும் கேப்டன்களாக உள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் நேற்று பில்வாரா கிங்ஸ் அணியும், இந்தியா கேப்பிட்டல்ஸ் மோதியது. முதலில் பேட்டிங் செய்த பில்வாரா கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷேன் வாட்சன் 65 ரன்னும், வில்லியம்ஸ் 59 ரன்னும், யூசுப் பதான் 48 ரன்னும் எடுத்திருந்தனர். 24 பந்தில் 48 ரன்கள் குவித்த யூசுப் பதான், ஜான்சன் பந்தில் ஆட்டம் இருந்தார். இவரது பந்தை நாலாபக்கமும் யூசுப் பதான் சிதறடித்ததால் ஜான்சன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் அடிக்க பாய்ந்ததால் மைதானத்தில் பரபரப்பு நிலவியது. உடனே நடுவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்திய பிரச்சினைக்கு தீர்வு கண்டனர். இதனிடையே யூசுப் பதானும், ஜான்சனும் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதே நேரத்தில் இந்த போட்டியில் ஜான்சன் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியன் கேப்பிட்டல் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in