வாகனத்திற்கு ஆவணங்கள் இருக்கா?: கேட்ட எஸ்.ஐ முகத்தில் குத்து விட்ட வக்கீல் கைது

காயம் அடைந்த எஸ்.ஐ பிரபாகர்.
காயம் அடைந்த எஸ்.ஐ பிரபாகர்.வாகனத்திற்கு ஆவணங்கள் இருக்கா?: கேட்ட எஸ்.ஐ முகத்தில் குத்து விட்ட வக்கீல் கைது

சென்னையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் இரவு நேரங்களில் குற்றங்களைத் தடுப்பதற்காக போலீஸார் ஆங்காங்கே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் போர் நினைவுச்சின்னம் அருகே கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபாகர் தலைமையிலான போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக பெண்ணுடன் வந்த நபரை போலீஸார் தடுத்து நிறுத்தி ஆவணங்களை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். உடனே அந்த நபர் வாகனத்தில் அமர்ந்தவாறே தான் ஒரு வழக்கறிஞர், ஹெல்மெட் உட்பட அனைத்து வாகன ஆவணங்களும் சரியாக உள்ளது என கூறியுள்ளார். இதன் பேரில் போலீஸார் அவர்களை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட வக்கீல்
வாக்குவாதத்தில் ஈடுபட்ட வக்கீல்வாகனத்திற்கு ஆவணங்கள் இருக்கா?: கேட்ட எஸ்.ஐ முகத்தில் குத்து விட்ட வக்கீல் கைது

ஆனால், அந்த நபர் செல்லாமல், வாகனத்தில் பின்னால் பெண் அமர்ந்து செல்லும் போது என்னை எப்படி நிறுத்தலாம் என்று கேட்டதுடன், தான் ஒரு வழக்கறிஞர் எனக்கூறி உதவி ஆய்வாளர் பிரபாகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அந்த நபர் அங்கிருந்த காவலர்களை ஒருமையில் திட்டியதால் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து திடீரென அந்த வாலிபர், உதவி ஆய்வாளரை முகத்தில் குத்தியதில் அவர் காயமடைந்தார். இதையடுத்து காயமடைந்த உதவி ஆய்வாளரை சக காவலர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் போலீஸார் அந்த வாலிபரைப் பிடித்து வாகனத்தை பறிமுதல் செய்ததுடன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது உதவி ஆய்வாளரை தாக்கிய நபர் வியாசர்பாடி எம்.கே.பி நகரைச் சேர்ந்த சூர்யபிரகாஷ் மகன் பிரசன்னா வெங்கடேஷ்(27) என்பதும், வழக்கறிஞர் என்பதும், மற்றொரு வழக்கறிஞரிடம் ஜூனியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து உதவி ஆய்வாளரை தாக்கியதாக பிரசன்னா வெங்கடேஷை கைது செய்த கோட்டை போலீஸார் அவர் மீது பணி செய்யவிடாமல் தடுத்தல், தாக்குதல், காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in