மதுரை மாணவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையம்: கொந்தளிக்கும் பெற்றோர்கள்

மதுரை மாணவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையம்: கொந்தளிக்கும் பெற்றோர்கள்

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர லட்சத்தீவில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது மாணவ- மாணவிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உயர் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வுகளை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. இந்த நுழைவுத்தேர்வால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு இருக்கிறது. நீட் என்னும் நுழைவுத்தேர்வால் 18க்கும் அதிகமான மாணவ- மாணவிகள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் விலக்கு கோரி தமிழக அரசு போராடி வருகிறது. மத்திய அரசு கொஞ்சம் கூட செவிசாய்க்கவில்லை. நீட் நுழைவுத் தேர்வால் ஆண்டுதோறும் மாணவ, மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டு வருவது பெற்றோர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது, பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. ஆனால், தமிழக அரசு இதனை அமல்படுத்தவில்லை. மாணவ, மாணவிகளின் படிப்பை இந்த நுழைவுத்தேர்வு அழித்துவிடும் என்று தமிழக அரசு கூறிவருகிறது. இதனிடையே, மத்திய அரசால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களில் சேர நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நுழைவுத்தேர்வை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது.

இந்நிலையில், தமிழக மாணவர் ஒருவர் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர லட்சத்தீவில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது மாணவ- மாணவிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "மதுரை மாணவர்

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர லட்சத்தீவில் தேர்வு மையம். நுழைவுத் தேர்வெழுத அலைகடல் தாண்டி பயணப்பட வேண்டுமா? தேர்ச்சி பெறுவதை விடக் கடினம் தேர்வு மையத்தை சென்று சேர்வது என்ற நிலையை உருவாக்காதீர்கள். தேர்வு மையத்தை மாற்றுங்கள்" என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதாப்பை டேக் செய்துள்ளார்.

இதனிடையே, "மதுரை - மேலூர் மாணவர் லோகேஷ்வருக்கு நீதி கிடைத்தது. தேர்வு மையம் லட்சத்தீவிலிருந்து மதுரைக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையின் (NTA)

ஒருங்கிணைப்பாளருக்கும், திருவாரூர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கும் எனது நன்றி. மாணவருக்கு வாழ்த்துகள்" என்று எம்பி சு.வெங்கடேசன் ட்வீட் செய்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in