பனியன் கம்பெனியில் வேலை செய்த ஒடிசா பெண்கள் 5 பேர் மாயம்: கடத்தப்பட்டார்களா என தீவிர விசாரணை

 பனியன் கம்பெனியில் வேலை செய்த  ஒடிசா பெண்கள் 5 பேர் மாயம்: கடத்தப்பட்டார்களா என தீவிர விசாரணை

மகளிர் தங்கும் விடுதியில் தங்கி பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த 5 பெண்கள் திடீரென மாயமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர், ஈரோடு பகுதிகளில் டெக்ஸ்டைல் சார்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் விடுதிகளில் தங்கி பணிபுரிந்து வருகிறார்கள். ஒடிசா மாநிலம், மஞ்சூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ரித்தரானி தன்டாபர்ட் (24), சுனில்ஹன்ஸ்டா (21), ஹஸ்மிதா ஹன்ஸ்டா (19), ரண்டிஹோ (20), சல்மிமுன்டா (21) ஆகிய 5 பெண்களும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையத்தில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் தங்கி, அதே பகுதியில் உள்ள  தனியார் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 18-ம் தேதி மாலை பெருந்துறைக்கு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக விடுதியை விட்டு சென்றிருக்கிறார்கள். வெளியே சென்ற 5 பெண்களும் இரவு முழுவதும் விடுதிக்கு வரவில்லை. இதையடுத்து விடுதி வார்டன் பெருந்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவர்கள் கடத்தப்பட்டுள்ளனரா அல்லது வேறு காரணங்களுக்காக விடுதிக்கு வராமல் உள்ளனரா என்ற கோணத்தில் தீவிரமாகத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in