சிறுமிக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு  வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளிக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை விதித்து திருவில்லிபுத்தூர் நீதிமன்றம் அதிரடி  தீர்ப்பளித்துள்ளது. 

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியைச் சேர்ந்த கூலி தொழிலாளி மதுரைவீரன் (49).  இவர் அப்பகுதியில் வசித்து வரும் 10  வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தார். இதுகுறித்து தனது பெற்றோரிடம் சிறுமி தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரது  பெற்றோர்,  கடந்த பிப்ரவரி மாதத்தில் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதனடிப்படையில் அருப்புக்கோட்டை மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ்  மதுரை வீரனை (49 ) கைது செய்தனர். 

இது தொடர்பான வழக்கு திருவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பூரண ஜெயஆனந்த், விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளித்தார். குற்றவாளியான மதுரைவீரனுக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, ரூ.10 லட்சம் இழப்பீடு தமிழக அரசு வழங்கவும் பரிந்துரைத்தார். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in