வாலிபரை கடப்பாரையால் அடித்துக் கொலை செய்த சிறுவன்: நள்ளிரவில் நடந்தது என்ன?

வாலிபரை கடப்பாரையால் அடித்துக் கொலை செய்த சிறுவன்: நள்ளிரவில் நடந்தது என்ன?

அடுத்தமாதம் வெளிநாடு செல்ல இருந்த வாலிபரை நள்ளிரவில் கடப்பாரையால் சிறுவன் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் அருகில் உள்ள அச்சன்குளம் ஓடைத்தெருவைச் சேர்ந்தவர் விவசாயி ராமகிருஷ்ணன். இவரது மனைவி ராசாத்தி. இந்த தம்பதியினரின் இளைய மகன் சுரேஷ்ராஜா(22). பட்டப்படிப்பு படித்துள்ளார். இந்நிலையில், மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். சுரேஷ்ராஜாவுக்கு குடிப்பழக்கம் இருந்துவந்தது. வழக்கம்போல் நேற்று இரவு நண்பர்களோடு சேர்ந்து குடித்துவிட்டு இரவு 12 மணிக்கு வீட்டுக்கு வந்தார்.

மங்கம்மாள் தெரு அருகில் வந்தபோது அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் 18 வயது மகன் அந்த வழியாக வந்துள்ளார். இருவருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்த நிலையில் இவர்களுக்கு கைகலப்பு ஏற்பட்டது. இதில் சுரேஷ்ராஜா அருகில் இருந்த கால்வாயில் விழுந்தார். அப்போது அந்த சிறுவன் கடப்பாரையால் சுரேஷ்ராஜாவின் தலையில் அடித்தார். இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ்ராஜா உயிர் இழந்தார். இந்த கொலை குறித்து கன்னியாகுமரி போலீஸார் வழக்குப்பதிந்து சிறுவனைக் கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட சுரேஷ்ராஜா அடுத்தமாதம் வெளிநாட்டில் வேலைக்குச் செல்ல இருந்தார். அதனிடையே இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in