வேலையை விட்டு நிறுத்தியதால் கோபம்: முதலாளியிடம் தகராறு செய்த கூலித்தொழிலாளி கொலை

வேலையை விட்டு நிறுத்தியதால் கோபம்: முதலாளியிடம் தகராறு செய்த கூலித்தொழிலாளி கொலை

வேலையை விட்டு நிறுத்திய முதலாளியிடம் வீடு தேடிப்போய் சண்டை போட்ட கூலித் தொழிலாளி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம், மேலத்திருப்பாலக்குடியைச் சேர்ந்த விவசாயி சக்கரவர்த்தி(41). இவரது வீட்டில் அதேபகுதியைச் சேர்ந்த சுபேந்திரன்(39) என்பவர் விவசாயக் கூலியாக வேலை செய்துவந்தார். சுபேந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அத்துடன் அடிக்கடி பலருடனும் சண்டை போட்டு வந்தார். இதன் காரணமாக சக்கரவர்த்தி அவரை வேலையில் இருந்து நிறுத்தினார்.

இதனால் ஆத்திரமடைந்த சுபேந்திரன் குடித்துவிட்டு வந்து தன் முதலாளியான சக்கரவர்த்தியிடம் தகராறு செய்தார்.நேற்று இரவும், அதேபோல் சுபேந்திரன், சக்கரவர்த்தியின் வீட்டிற்குப்போய் தகராறு செய்தார்.

இதில் கோபம் அடைந்த சக்கரவர்த்தி அரிவாளால் சுபேந்திரனை வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே சுபேந்திரன் உயிர் இழந்தார். இதுகுறித்து பரவக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து சுபேந்திரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in