இடிக்கப்பட்ட மொட்டை மாடி; சரிந்து விழுந்த சுவர்: பறிபோன கூலித் தொழிலாளியின் உயிர்

இடிக்கப்பட்ட மொட்டை மாடி; சரிந்து விழுந்த சுவர்: பறிபோன கூலித் தொழிலாளியின் உயிர்

பட்டினம்பாக்கத்தில் பிரபல நகைகடை உரிமையாளருக்கு சொந்தமான வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபடிருந்த போது சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.

சென்னை பட்டினம்பாக்கம் கற்பகா அவென்யூ பகுதியில் எல்.கே.எஸ். கோல்டு ஹவுஸ் நிறுவனத்தின் உரிமையாளருக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. பழமையான இந்த வீட்டை இடித்து விட்டு புதுவீடு கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 20க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் இங்கு தங்கி வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் மொட்டை மாடியில் உள்ள மதில் சுவரை இடிக்கும் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, திடீரென சுவர் மேலே சரிந்து விழுந்ததில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (39) என்பவர் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு தொழிலாளி வாசு(40) லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இது குறித்து தகவலறிந்த பட்டினம்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து இடர்பாடுகளில் சிக்கிய முத்துகிருஷ்ணன் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த வாசு ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கூலித் தொழிலாளி வாசு அளித்த தகவலின் பேரில் பட்டினம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in