மிஸ்டுகால் பழக்கத்தால் நெருக்கம்: இளம்பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளி கைது

மிஸ்டுகால் பழக்கத்தால் நெருக்கம்: இளம்பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளி கைது
Bala K

திண்டுக்கல் அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர். 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே முத்துகோவில்பட்டி கிழவன்அம்பலம் மகன் கார்த்திக் (31). கூலித்தொழிலாளியான, இவருக்கு திருமணமாகி 2 வயது பெண் குழந்தை உள்ளார். இந்நிலையில் நத்தம் பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண் மிஸ்டு கால் மூலம் இவருக்கு பழக்கம் கிடைத்தது. திருப்பூரில் வேலைபார்த்த அப்பெண் கடந்த தீபாவளி விடுமுறைக்கு ஊர் திரும்பினார்.

இதன் பின்னர் கார்த்திக் உடன் செல்போனில் அடிக்கடி பேசி பழகி வந்தார். தனக்கு திருமணமானதை கார்த்திக் மறைத்து அப்பெண்ணுடன் பழகினார். இந்நிலையில் கடந்த 9-ம் தேதி, அப்பெண்ணை கோபால்பட்டி வருமாறு கார்த்திக் அழைத்தார். திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து அப்பெண்ணுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

இதன் பின் 10-ம் தேதியில் இருந்து கார்த்திக் மாயமானார். செய்வதறியாது திகைத்த அப்பெண்ணை, அவரது பெற்றோரை வரவழைத்து அப்பகுதி மக்கள் அனுப்பினர். இதுகுறித்து போலீஸில் அப்பெண் புகார் அளித்தார். இதன்படி, சாணார்பட்டி மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கார்த்திக்கை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in