பள்ளி மாணவி 6 மாத கர்ப்பம்: 2 ஆண்டாக மிரட்டி பாலியல் வன்முறை செய்த தொழிலாளி போக்சோவில் கைது

பள்ளி மாணவி 6 மாத கர்ப்பம்: 2 ஆண்டாக மிரட்டி பாலியல் வன்முறை செய்த தொழிலாளி  போக்சோவில் கைது

கடந்த இரு ஆண்டுகளாக பள்ளி மாணவியை மிரட்டி தொழிலாளி ஒருவர் பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார். மாணவி கர்ப்பமானதால் இவ்விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கீழபாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன்(42) தனியாருக்குச் சொந்தமான தீப்பெட்டி ஆலை ஒன்றில் தொழிலாளியாக உள்ளார். இவர் தன் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் 11-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கடந்த இரு ஆண்டுகளாகவே பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுத்து வந்துள்ளார். இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் உன் குடும்பத்தையே அசிங்கப்படுத்திவிடுவேன் என மகேந்திரன் மிரட்டியிருக்கிறார். இந்த மிரட்டலுக்குப் பயந்து, அந்தச் சிறுமி இவ்விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருந்திருக்கிறார்.

இந்நிலையில் அந்தச் சிறுமிக்கு கடந்த சிலதினங்களாக வயிற்றுவலி இருந்ததால், அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போதுதான் அந்த மாணவி ஆறுமாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. குழந்தையின் பெற்றோர் இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுத்தனர். குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் நேரில் வந்து விசாரித்தனர். அப்போதுதான் தன்னை மிரட்டி மகேந்திரன் கடந்த இரு ஆண்டுகளாக பாலியல் தொல்லைக் கொடுத்த விஷயத்தை அந்த மாணவி குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து மகேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைதுசெய்தனர். கைதான மகேந்திரனுக்கு திருமணம் முடிந்து நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in