பற்றி எரிந்த பிரபல மெத்தை ஷோரூம்: அடுத்தடுத்த கடைகளில் தீ பரவியதால் அதிர்ச்சி

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறை வீரர்கள்.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறை வீரர்கள்.பற்றி எரிந்த பிரபல மெத்தை ஷோரூம்: அடுத்தடுத்த கடைகளில் தீ பரவியதால் அதிர்ச்சி

பெங்களூருவில் குர்ல் ஆன் மெத்தை ஷோரூமில் இன்று ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

பற்றி எரியும் தீ
பற்றி எரியும் தீபற்றி எரிந்த பிரபல மெத்தை ஷோரூம்: அடுத்தடுத்த கடைகளில் தீ பரவியதால் அதிர்ச்சி

பெங்களூரு சர்ஜாபூர் சாலை கைகொண்டனஹள்ளி ஏரி அருகே குர்ல் ஆன் மெத்தை ஷோரூம் உள்ளது. இன்று காலை அந்த மெத்தை ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ அடுத்த கடைகளுக்கும் பரவியது. தகவல் அறிந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

எரியும் மெத்தை ஷோரூம்.
எரியும் மெத்தை ஷோரூம்.பற்றி எரிந்த பிரபல மெத்தை ஷோரூம்: அடுத்தடுத்த கடைகளில் தீ பரவியதால் அதிர்ச்சி
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர்
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் பற்றி எரிந்த பிரபல மெத்தை ஷோரூம்: அடுத்தடுத்த கடைகளில் தீ பரவியதால் அதிர்ச்சி

இந்த தீ விபத்தில் குர்ல் ஆன் மெத்தை ஷோரூமில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து பெல்லந்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த விபத்து நடந்து போன அவ்வழியே சென்ற ஹர்ஷா பரத்வாஜ் என்பவர் ஷோரூம் தீப்பிடித்து எரியும் காட்சிகளை செல்போனில் பதிவு செய்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in