வீட்டு கதவை திறந்த தாய் அதிர்ச்சி; ரத்த வெள்ளத்தில் கிடந்த மகன்: ராமநாதபுரத்தில் கொடூரம்

வீட்டு கதவை திறந்த தாய் அதிர்ச்சி; ரத்த வெள்ளத்தில் கிடந்த மகன்: ராமநாதபுரத்தில் கொடூரம்

குண்டாஸில் சிறை சென்ற வாலிபர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் அருகே காட்டுபிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பிரபாகரன் மகன் பக்கா (எ)பிரபு தேவா, (28). குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் 2 முறை சிறை சென்ற இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருமணமாகாத, இவர் தாயார் வீட்டில் உள்ள அறையில் நேற்றிரவு உறங்கினார். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் அவரது தாயார் அங்கு சென்று பார்த்தார். அப்போது ரத்த வெள்ளத்தில் ரத்த வெள்ளத்தில் மகன் இறந்து கிடந்தார். மகன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீஸார் அங்கு சென்று பிரபு தேவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். படுகொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். முன் விரோதம் காரணமாக வெட்டிக் கொல்லப்பட்டரா? அவரது கூட்டாளிகள் குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in