குழந்தைகளைப் பிச்சை எடுக்க வைத்தால் குண்டாஸ்: ஆப்ரேஷன் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் போலீஸ் நடவடிக்கை

குழந்தைகளைப் பிச்சை எடுக்க வைத்தால் குண்டாஸ்: ஆப்ரேஷன் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் போலீஸ்  நடவடிக்கை

தமிழகத்தில் ஏழைப் பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தியவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை எச்சரிக்கை. விடுத்துள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற சாலை சந்திப்பு, புறவழிச்சாலை, சுங்கச்சாவடிகளில், பெண்கள் மற்றும் சிறார்கள் பிச்சை எடுப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவர்களை ஒரு கும்பல் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தி லாபம் அடைவதால் இதனை தடுத்து ஆப்ரேஷன் மறுவாழ்வு என்ற பெயரில் அதிரடி நடவடிக்கை இன்று காவல் துறையால் தொடங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களிலும், 9 காவல் ஆணையரகத்திலும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 726 பிச்சைகாரர்கள் மற்றும் 16 குழந்தைகள் போலீஸாரால் மீட்கப்பட்டனர். பெண்கள்,மற்றும் குழந்தைகளையும் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்திய நபர்களைப் பற்றி காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

அத்துடன் மீட்கப்பட்ட பிச்சைகாரர்களை மறுவாழ்வு இல்லத்திற்கும், குழந்தைகளைக் காப்பகத்திற்கும் அனுப்பி வைத்ததுடன் 150 நபர்களை குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர். ஏழை பெண்கள், மற்றும் குழந்தைகளைப் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் வெகு தொலைவில் இருந்து பெண்கள் ,மற்றும் குழந்தைகளை அழைத்து வந்து சென்னை, கோவை,மதுரை, திருச்சி, சேலம் போன்ற பெரும் நகரங்களில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தும் ஆட்கடத்தல் குற்றவாளிகள் பற்றி தகவல் தெரிந்தால் 044- 28447701 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு பண வெகுமதி அளிக்கப்படும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in