`தாத்தா சொத்தை திருப்பிக் கொடுங்க'- தலைமைச் செயலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

`தாத்தா சொத்தை  திருப்பிக் கொடுங்க'- தலைமைச் செயலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் ஜான் செல்வராஜ் நகரை சேர்ந்தவர் மணிமாறன் மனைவி விமலா ( 53). ஜான் செல்வராஜ் நகரில் இவர்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர்  நிலம் இருந்தது.  அதை இவர்களுடைய தாத்தா கும்பகோணம் நகராட்சிக்கு எழுதி கொடுத்துவிட்டார். (தற்போது அது மாநகராட்சி) பல வருடங்களாக அந்த இடத்தில் எந்தவித கட்டிடமும் கட்டாததால் அதை தங்களுக்கே திருப்பித் தந்து விடுமாறு கேட்டு இருக்கின்றனர்.  அதற்கு நகராட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

இதனை அடுத்து  தங்களுக்கு நிலத்தை திருப்பித் தர உத்தரவிடுமாறு 2015-ம் ஆண்டில்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்கள். அந்த வழக்கில் நகராட்சிக்கு சாதகமாக  தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதனையடுத்து தங்களுக்கு சொந்தமான  அந்த இடத்தை மீட்டுத் தருமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் உட்பட்ட அதிகாரிகள் பலரிடமும் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதனையடுத்து  தங்களுக்கு நிலத்தை திருப்பித் தர உத்தரவிடுமாறு 2015-ம் ஆண்டில்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்கள். அந்த வழக்கில் நகராட்சிக்கு சாதகமாக  தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தங்களுக்கு சொந்தமான  அந்த இடத்தை மீட்டுத் தருமாறு சென்னை தலைமைச் செயலகத்திற்கு இன்று காலை தனது குடும்பத்தினருடன் சென்றிருந்த விமலா நான்காம் நுழைவாயில் அருகே வெகு நேரம் காத்திருந்தார். ஒரு கட்டத்தில் தனது பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தன்மீது ஊற்றிக்கொண்டு தீ வைக்க முயன்றார்.

இதனைப் பார்த்த அங்கிருந்த காவலர்கள் உடனடியாக ஓடி வந்து விமலாவை தடுத்து நிறுத்தி அசம்பாவிதம் நடக்காமல் காப்பாற்றினர். அவரிடம் நடைபெற்ற விசாரணையில் மேற்கண்ட தகவல்களை அவர் போலீஸாரிடம் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in