எனது அடுத்த இலக்கு மிஸ் இந்தியா தான்: குமரி மாணவி பேட்டி

எனது அடுத்த இலக்கு மிஸ் இந்தியா தான்: குமரி மாணவி பேட்டி

தனியார் அமைப்பு ஒன்று நடத்திய மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் குமரிமாவட்டத்தைச் சேர்ந்த மாணவி வென்றார். இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அவரது வீட்டில் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தனியார் அமைப்பு ஒன்று இந்திய அளவிலான அழகிப் போட்டியை நடத்துகிறது. இதில் பெங்களூருவில் மருத்துவம் பயிலும் நாகர்கோவிலைச் சேர்ந்த நிஷோஜாவும் கலந்து வருகிறார். முன்னதாக ராஜஸ்தானில் வைத்து நடைபெற்ற மாநில அளவிலான அழகிப் போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டு ரன்னர் பிரிவில் வென்றார். தொடர்ந்து இப்போது ஜெய்ப்பூரில் நடந்த தென் இந்தியா அளவில் நடைபெற்ற போட்டியிலும் இப்போது வென்றுள்ளார்.

நிஷோவின் சொந்த ஊரான நாகர்கோவில், தளவாய்புரத்தில் உள்ள அவரது வீடு இதனால் களைகட்டிஉள்ளது. அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி இதை உற்சாகமாகக் கொண்டாடினர். ”மாநிறம் கொண்ட பெண்களும் வாகை சூடலாம் என்பதற்கு எனது அழகித் தேர்வு முழு உதாரணம். பெண்கள் வெளி உலகிற்கு வந்து, பலப் போட்டிகளிலும் அதிகம் தன்னம்பிக்கையுடன் கலந்து கொள்ள வேண்டும். இதற்கு முன்பு மிஸ் கன்னியாகுமரி, மிஸ் தமிழ்நாடு பட்டங்களையும் வென்றுள்ளேன். அடுத்த இலக்கு மிஸ் இந்தியா ”என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in