ஆன்லைன் மோசடி கும்பலிடமிருந்து 31 லட்சம் மீட்பு: குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் அதிரடி

ஆன்லைன் மோசடி கும்பலிடமிருந்து 31 லட்சம் மீட்பு: குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் அதிரடி

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்த 41 பேரின் 31 லட்சம் ரூபாயை சைபர் கிரைம் போலீஸார் மீட்டனர். இந்தப் பணம் இன்று குமரி மாவட்ட எஸ்.பி ஹரி கிரண் பிரசாத்தால் உரியவர்களுக்கு வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆன்லைனில் வேலைவாய்ப்பு, ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்தால் பொருட்கள் மற்றும் பணத்தைத் திரும்பக் கொடுக்காமல் மோசடி செய்தல், கிரெடிட் கார்டு ஆக்டிவேட் செய்யச் சொல்லி லிங்கைப் பயன்படுத்தி மோசடி, ஜிபே, போன் பே போன்ற பண பரிவர்த்தனைகளில் எண் மாற்றி போட்டு பணத்தைத் திரும்ப தராமல் மோசடி போன்ற ஆன்லைன் சைபர் கிரைம் குற்றங்களில் பாதிக்கப்பட்டு குமரிமாவட்டத்தைச் சேர்ந்த 41 பேர் தங்கள் பணத்தை இழந்தனர்.

இதில் பாதிக்கப்பட்ட நபர்கள் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத்திடம் புகார் அளித்தனர். இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் சைபர் கிரைம் போலீஸாருக்கு உத்தரவிட்டார். இப்புகார்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு 31,69,843 ரூபாய் பணத்தை மீட்டனர். இதை குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து பணத்தை இழந்த நபர்களிடம் ஒப்படைத்தார். மேலும் விரைந்து செயல்பட்டு இழந்த பணத்தை மீட்டு கொடுத்த சைபர் கிரைம் போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், பணத்தை இழந்த புகார்தாரர்களும் வெகுவாக  பாராட்டினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in