மாலத்தீவு தீ விபத்தில் குமரி தம்பதி பலி: இந்தியர்கள் 9 பேர் உயிரிழந்த சோகம்

மாலத்தீவு தீ விபத்தில் குமரி தம்பதி பலி: இந்தியர்கள் 9 பேர் உயிரிழந்த சோகம்

மாலத்தீவில் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் உள்பட 11 பேர் பலியாகினர். அதில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியும் உயிர் இழந்திருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

மாலத்தீவு தலைநகர் மாலேவில் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்று நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்தது. 11 பேர் பலியாகினர். பலர் தீக்காயம் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிர் இழந்தவர்களில் 9 பேர் இந்தியர்கள். இவர்களில் மூவர் தமிழகத்தையும், இருவர் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இருந்து உயிர் இழந்த மூவரின் அடையாளமும் தெரியவந்துள்ளது இதில் திருவண்ணாமலையைச் சேர்ந்த தேன்மொழி என்பவரும் இறந்துள்ளார். இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரக்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெனில், அவரது மனைவி சுந்தரி ஆகியோரும் உயிர் இழந்துள்ளனர். ஜெனில் மாலத்தீவில் கார்பென்டராக வேலை செய்து வந்தார். ஆந்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுந்தரியை திருமணம் செய்து அவருடன் அங்கு வாழ்ந்து வந்தார். இந்தத் தீவிபத்தில் தம்பதிகள் இருவரும் உயிர் இழந்துள்ளனர். இந்தத் தகவல் காஞ்சிரக்கோடு சுற்றுவட்டாரப் பகுதி மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in