"சமூக விரோதிகள் உள்ளே நுழைந்ததால் சின்னசேலம் வன்முறை களமாக மாறி உள்ளது": கே.எஸ்.அழகிரி

 செய்தியாளர்கள் சந்திப்பின் போது...
செய்தியாளர்கள் சந்திப்பின் போது...

பொதுமக்களின் கோபத்தைப் பயன்படுத்திக் கொண்டு சமூகவிரோதிகள் உள்ளே நுழைந்ததால், சின்னசேலம் மாணவி இறந்த விவகாரம் வன்முறையாக மாறியுள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் நேற்று இரவு காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் கே. எஸ். அழகிரி கலந்துகொண்டார். கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மாணவி மரணத்திற்கான காரணம் காவல்துறையின் முழுமையான விசாரணைக்கு பிறகு தான் தெளிவாகத் தெரிய வரும். அந்தை மாணவியின் பெற்றோர்கள், உறவினர்கள், கிராமத்தினர் கொஞ்சம் எழுச்சி அடைந்ததை குற்றம் என்று கூற முடியாது. அவர்கள் கோபமடைந்து உள்ளார்கள். அதை பயன்படுத்திக் கொண்டு சமூக விரோதிகள் உள்ளே நுழைந்ததால் வன்முறையாக மாறி உள்ளது. காவல்துறை அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.

தொடர்ந்து, "காவல்துறை இந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுகிறது. சமூக விரோதிகள் உள்ளே நுழைந்தது தான் தவறு. பள்ளிப் பிள்ளைகளின் பாதுகாப்பை தனியார் பள்ளி நிர்வாகம் உறுதி செய்யத் தவறினாலும் தவறுதான், அரசாங்கம் உறுதி செய்யத் தவறினாலும் தவறுதான். எனவே, தனியார் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் இதனை அரசியல் ஆக்கக்கூடாது. மாணவியின் மரணத்தை மறைத்து விட்டு வேறு கோணத்தில் செல்வது என்பது தவறு" என்றும் அவர் சொன்னார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in