30 அடி நீளம், 12 அடி அகலத்தில் தேசியக்கொடியை கோலத்தில் வரைந்து அசத்திய கொள்ளிடம் பெண்கள்!

தேசியக் கொடியை கோலத்தில் வரைந்த கொள்ளிடம் பெண்கள்
தேசியக் கொடியை கோலத்தில் வரைந்த கொள்ளிடம் பெண்கள் 30 அடி நீளம், 12 அடி அகலத்தில் தேசியக் கொடியை கோலத்தில் வரைந்த கொள்ளிடம் பெண்கள்

சீர்காழி அருகே கொள்ளிடத்தில்  7 மணி நேரத்தில் 30 அடி நீளம், 12 அடி அகலத்தில் தேசியக் கொடியை கோலத்தில்  வரைந்து அசத்தியிருக்கிறார்கள்  சகோதரிகள்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடம் ரயில்வே ரோடு தெருவை சேர்ந்தவர்கள் கயல்விழி , வினோதினி சகோதரிகள். சிறுவயது முதலே கோலம் போடுவதில் ஆர்வம் கொண்ட இவர்கள் சமீபத்தில் மார்கழி மாதம் முழுவதும் தங்கள் வீடுகளின் முன்பு விதவிதமான கோலங்கள் வரைந்து அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தனர்.

இந்தநிலையில்  இந்திய நாட்டின் 74-ம் ஆண்டு குடியரசுத் தின விழாவை முன்னிட்டு இவர்கள் வீட்டில் 30 அடி நீளமும் 12 அடி அகலமும் கொண்ட  மிகப் பிரமாண்டமான தேசியக்கொடியை மூன்று வண்ணங்களில் வரைந்து அசத்தியுள்ளனர். ஆரஞ்சு, வெள்ளை, பச்சை உள்ளிட்ட கலர் கோல மாவுகளை  பயன்படுத்தி  ஏழு மணி நேரம் மிக அழகாக  வண்ணம் தீட்டி நேர்த்தியாக தேசியக்கொடியை வரைந்து முடித்தனர்.

மரம் வளர்ப்பதின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் எனும் வாசகத்தையும் எழுதியுள்ளனர். இதை அறிந்து சுற்றுப்புறங்களில் உள்ள மக்கள் இவர்களின் வீடு தேடி வந்து கோலத்தை பார்த்து ரசித்து மரியாதை செலுத்தி செல்கின்றனர்.  சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மனதில் தேசப்பற்றை வளர்க்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள இவர்களை பாராட்டி வருகின்றனர். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in