வங்கக்கடலில் உருவான ரெமல் புயல்... கொல்கத்தா விமான நிலையம் 21 மணி நேரத்திற்கு மூடல்!

வங்கக்கடலில் உருவான ’ரெமல்’ புயல்
வங்கக்கடலில் உருவான ’ரெமல்’ புயல்
Updated on
2 min read

வங்கக் கடலில் உருவாகியுள்ள ரெமல் புயல் காரணமாக கொல்கத்தா விமான நிலையம் 21 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு ரெமல் புயலாக உருவாகியுள்ளது. இந்த புயல் 11 கிலோமீட்டர் வேகத்தில் வங்கதேசம், மேற்குவங்கம் இடையேயான கரையை நோக்கி வடகிழக்கு திசையில் நகர்ந்து வருகிறது. இன்று இரவு இந்த புயல் தீவிர புயலாக மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் இன்று நள்ளிரவு வங்கதேசம் கேப்புபாராவிற்கும், மேற்கு வங்காள சாகர் தீவுக்கும் இடையே இந்த புயல் கரையைக் கடக்கக்கூடும். புயல் கரையை கடக்கும் போது தரைக்காற்று மணிக்கு 110 முதல் 120 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 135 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

புயலால் கொந்தளிப்பில் வங்கக்கடல்
புயலால் கொந்தளிப்பில் வங்கக்கடல்

ரெமல் புயல் காரணமாக கடலோர மாநிலங்களில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புயல் காரணமாக தமிழ்நாட்டிற்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றாலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கொல்கத்தா விமான நிலையம் 21 மணி நேரம் மூடல்
கொல்கத்தா விமான நிலையம் 21 மணி நேரம் மூடல்

வருகிற 27ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே புயல் காரணமாக கொல்கத்தா விமான நிலையம் அடுத்த 21 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவிற்கு வரும் விமானங்கள் அனைத்தும் கௌஹாத்தி மற்றும் இதர விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. விமான பயணிகள் அதற்கு ஏற்ப தங்களது பயணத் திட்டத்தை அமைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாகர் தீவு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மேற்குவங்க அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in