தமிழ்நாடு அரசு கேட்ட கால அவகாசம்: கோடநாடு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கோடநாடு எஸ்டேட்
கோடநாடு எஸ்டேட்தமிழ்நாடு அரசு கேட்ட கால அவகாசம்: கோடநாடு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து கோடநாடு கொலை வழக்கு விசாரணை மார்ச் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கோடநாட்டில்  ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்குச் சொந்தமான  பங்களாவில் கடந்த 2017 ஏப்.23-ம் தேதி நள்ளிரவு புகுந்த 11 பேர் கொண்ட கும்பல்  அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு அங்கிருந்து பல்வேறு.முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களைக் கொள்ளையடித்து சென்றது. 

இந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். நான்கு ஆண்டுகளாக இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், கனராஜின் மனைவி, மைத்துனர், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி உட்பட இதுவரை 316 பேரிடம் தனிப்படை போலீஸார் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். 

இவ்வழக்கு விசாரணை   இன்று மீண்டும் ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில்  வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜராகினார். சிபிசிஐடி கூடுதல் எஸ்பி முருகவேல், டிஎஸ்பிக்கள் அண்ணாதுரை, சந்திரசேகர் ஆஜராகினர்.  இதுவரை 103 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ள நிலையில்  வழக்கு விசாரணையை மேற்கொள்ள காலஅவகாசம் அளிக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து  நீதிபதி ஸ்ரீதர் இவ்வழக்கின் விசாரணையை மார்ச் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in