கொச்சுவேலி, குமரி - கொல்லம் மெமு ரயில்கள் 8 நாட்கள் ரத்து: காரணம் என்ன?

கொச்சுவேலி, குமரி - கொல்லம் மெமு ரயில்கள் 8 நாட்கள் ரத்து: காரணம் என்ன?

கன்னியாகுமரி- கொல்லம் மெமு உள்ளிட்ட இரு ரயில்கள் 26-ம் தேதிவரை முழுதாக ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல் சில ரயில்கள் தாமதமாக ஓடும் எனவும் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து திருவனந்தபுரம் மாவட்ட ரயில்வே கோட்ட அதிகாரிகள் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், `கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்து உள்ளது கொச்சுவேலி ரயில் நிலையம். இங்கு கட்டுமானப் பணிகள் நடந்துவருகிறது. இதன் காரணமாக வரும் 26-ம் தேதிவரை ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக, ரயில் எண் 06772 கொல்லம் சந்திப்பு- கன்னியாகுமரி மெமு சிறப்பு ரயிலானது நவம்பர் 19, 21, 23, 26 ஆகிய தேதிகளில் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. இதே ரயில் மறுமார்க்கத்தில், 06773 கன்னியாகுமரி- கொல்லம் மெமு ரயிலானது 19, 21, 23, 26 ஆகிய தேதிகளில் முற்றாக ரத்து செய்யப்படுகிறது.

தடம் எண் 06429 கொச்சுவேலி- நாகர்கோவில் சந்திப்பு ரயிலானது 19,21, 23, 26 ஆகிய தேதிகளில் முற்றாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் 06430 இதே தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து கொச்சுவேலி செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் ரயில் எண் 16366 நாகர்கோவில்- கோட்டயம் முன்பதிவு செய்யப்படாத விரைவு ரயில் 19 மற்றும் 26-ம் தேதிகளில் ஒருமணி நேரம் தாமதமாக ஓடும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in