கல்லூரி வகுப்பறையில் நடந்த முத்தப்போட்டி: மாணவ, மாணவியின் வீடியோ வைரல்

கல்லூரி வகுப்பறையில் நடந்த முத்தப்போட்டி: மாணவ, மாணவியின்  வீடியோ வைரல்
desk

கர்நாடகாவில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு இடையே நடைபெற்ற முத்தப் போட்டி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடகா மாநிலத்தில் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவில் உள்ள மங்களூரு நகரில் பிரபல கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
இந்த கல்லூரி வகுப்பறையில் மாணவர், மாணவி உதட்டோடு உதடு முத்தமிட்டுக் கொள்வதும், அதை சக மாணவர்கள் உற்சாகப்படுத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வகுப்பறைக்குள் கல்லூரி மாணவர்களுக்கிடையே முத்தமிடுதல் போட்டி நடந்ததாக கூறப்படுகிறது.

இகுறித்து மங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் சசிக்குமார் கூறுகையில், மங்களூருவில் தனியார் கல்லூரி ஒன்றில் மாணவர்-மாணவி ஒருவருக்கொருவர் முத்தமிட்டு கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சம்பவத்தின்போது மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தினரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார். இந்த முத்த வீடியோவால் இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in